ஆண்களிடம் இதெல்லாம் பிடிக்கும்! பெண்களே சொல்லி இருக்காங்க…!!

Read Time:3 Minute, 47 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஆண்களை பார்த்தால் வெட்கத்தில் ஓடி மறைந்துக் கொள்ளும் பெண்கள் இருந்தது ஒரு காலத்தில்.

ஆனால் இன்றைய காலத்தில் ஆண்கள்- பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் பழகுகின்றனர்.

ஏனெனில் கல்வி, வேலை, குடும்ப பொறுப்புகள், சமூகப்பார்வை இது போன்ற அனைத்து விதமான செயல்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர்ந்து நிற்கிறார்கள்.

அப்படி இருக்கும் இந்த மாடர்ன் சமூகத்தில், ஆண்களிடம் உள்ள விஷயங்களில் எதை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்பதை பற்றி பெண்கள் கூறும் கருத்துக்களை தெரிந்துக் கொள்வோம்.

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்

ஆண்கள், பெண்களிடம் எந்த ஒரு தவறான பார்வையின்றி, ஆண் நண்பர்களுடன் பழகுவது போன்றே, பெண்களிடமும் பழகுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடத்தில், யாரேனும் உதவி கேட்கும் போது, அவர்களுக்கு எந்தவொரு தயக்கமும் இன்றி உதவி செய்யும் ஆண்களை, பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்கள் தங்களிடம் பழகும் ஆண்கள் மற்றும் அவர்களின் வீட்டில் உள்ள அனைவரும் அந்த பெண்ணையும் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணாக நினைப்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்

ஆண்களுக்கு காதல் தோல்வி என்றால் உடனே அந்த பெண்ணின் படத்தை சமூக தளங்களில் பரப்பி அவளை அசிங்கப்படுத்துவது, அருவருப்பான வார்த்தைகள் சொல்லி திட்டுவது இது போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

அலுவலகத்தில் பணிபுரியும் போது, ஒரு பெண்ணுக்கு கீழ் பணிபுரிய மறுப்பது, பதவி உயர்வு பெறும் ஒரு பெண்ணை, அவள் தவறான முறையில் தான் அந்த இடத்தை அடைந்திருப்பாள் என்று கிசுகிசுத்து மற்றவர்களிடம் பேசுவது இது போன்று செயல்படும் ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு சமநிலை அளிக்க தயங்குவது, அவர்கள் நாம் சொல்வதை தான் கேட்க வேண்டும் நமக்கு அடிமையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு சம உரிமைகள் அளிக்காத ஆண்களை, பெண்கள் எப்போதுமே வெறுப்பார்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!!
Next post சிறுநீர் நுரை போன்று வெளியாகிறதா? ஆபத்து அறிந்துகொள்ளுங்கள்…!!