வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை…!!

Read Time:4 Minute, 23 Second

201611151209265656_vyasarpadi-near-rowdy-murder_secvpfவியாசர்பாடி சஞ்சய் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அப்பு என்ற மணிகண்டன் (26). இவர்மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது மனைவி இந்துமதி. 8 மாத பெண் குழந்தை உள்ளது.

அப்புவுக்கு, சஞ்சய் நகர் 4-வது தெருவை சேர்ந்த ரவுடிகளும், அண்ணன்- தம்பிகளுமான செபஸ்டின், சவுந்தர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதில் செபஸ்டின் ஒரு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்து சமீபத்தில்தான் வெளியே வந்து இருந்தார். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு அடிதடி வரை சென்று உள்ளது.

இந்த நிலையில் வழக்குகள் சம்பந்தமாக அப்புவை போலீசார் அடிக்கடி தேடி வந்ததால் அவர் மட்டும் செங்குன்றத்தில் தங்கி இருந்தார். மனைவி-குழந்தையை பார்க்க அதிகாலை நேரத்தில் வியாசர்பாடிக்கு வந்து விட்டு செல்வார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரம்பூரில் அப்புவுக்கும், செபஸ்டினுக்கும் தகராறு ஏற்பட்டது. ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டனர். பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததும் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை அப்பு தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வந்தார். அதன்பின் 7.30 மணிக்கு செங்குன்றத்துக்கு புறப்பட்டார்.

அப்போது சஞ்சய் நகர் 4-வது தெருவில் உள்ள உறவினர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த செபஸ்டின், சவுந்தர் திடீரென கத்தியால் அப்புவை சரமாரி வெட்டினார்கள்.

அவரிடமிருந்து தப்பிக்க அப்பு ஓடினார். ஆனால் அவரை துரத்தி சென்று தலை, கழுத்து, மார்பில் வெட்டியதில் கீழே விழுந்தார். அவரது தலை மேல் பகுதி பிளந்துவிட்டது. இதை பார்த்த அப்புவின் உறவினர்கள் பயத்தில் ஓடிவிட்டனர். அப்புவின் தாய் பாப்பா, மகன் வெட்டப்படுவதை பார்த்து அலறியபடி ஓடி வந்தார். உடனே செபஸ்டின், சவுந்தர் தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த அப்பு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ராஜேந்திரன், ரத்தினவேல் பாண்டியன், உக்கிரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பு உடலை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையை நேரில் பார்த்த தாய் பாப்பா கூறுகையில், “எனது மகனை போலீசார் அடிக்கடி தேடி வந்ததால் அவனை மட்டும் செங்குன்றத்தில் தங்க வைத்தோம். இன்று காலை பேத்தியை பார்க்க வந்த அவனை செபஸ்டின், சவுந்தர் பின் தொடர்ந்து செல்வதாக மருமகள் என்னிடம் கூறினாள். உடனே நான் அங்கு சென்ற போது மகனை இருவரும் சரமாரியாக வெட்டி கொண்டிருந்தனர். அலறியபடி நான் ஓடி வந்ததும் இருவரும் தப்பி ஓடி விட்டனர்” என்றார்.

செபஸ்டின், சவுந்தர்களின் உறவினர்கள் வீடுகளை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர். பட்ட பகலில் நடந்த கொலையால் வியாசர்பாடியில் பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து செபஸ்டின், சவுந்தரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து போன காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்…!!
Next post ஆசிரியை தாக்கியதில் மாணவி கை உடைந்தது: மனித உரிமை கமி‌ஷன் விசாரணை…!!