நயன்தாராவின் 55-வது படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 43 Second

201611151338110276_nayanthara-55-movie-title-announced-date-release_secvpfநயன்தாரா நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’ படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து மீஞ்சூர் கோபி இயக்கும் புதிய படத்திலும், ‘டோரா’ என்ற படத்திலும் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். இதில், மீஞ்சூர் கோபி இயக்கும் படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வருகிற 17-ந் தேதி இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ.ரமேஷ் தயாரித்து இருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ் மற்றும் வேலு ராமமூர்த்தி, ராமதாஸ், சுனு லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நயன்தாரா நடிக்கும் 55-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த எண்ணெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Next post பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா…!! வீடியோ