ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு…!!
ரஜினி நடிப்பில் இந்திய திரையுலகமே வியப்போடு எதிர்பார்க்கும் பிரம்மாண்ட படம் ‘2.ஓ’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வருகிற நவம்பர் 20-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் நவம்பர் 20-ந் தேதி மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. மேலும், லைக்காவின் மொபைல் ஆப் மூலமாகவும் இந்நிகழ்வை நேரடியாக காணலாம்.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், அக்ஷய்குமார், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
Average Rating