நாய்க்குட்டி என நினைத்து ஓநாயை செல்லப்பிராணியாக வளர்த்த வாலிபர்…!!

Read Time:2 Minute, 23 Second

201611171450463740_young-man-adopts-a-cute-puppy-realizes-hes-actually-a_secvpfஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒருநாள் தெருவில் நடந்து செல்கையில் ‘இங்கு நாய்க்குட்டிகள் இலவசமாகக் கிடைக்கும்’ என்ற அறிவிப்பை ஒரு வீட்டின் முன்
பார்த்துள்ளார்.

ஏற்கனவே நாய்க்குட்டி வளர்க்கும் ஆசையில் இருந்ததால் அந்த வீட்டிற்கு சென்று நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து வளர்க்கத் தொடங்கினார்.

நியோ என பெயரிட்டு அந்த குட்டியை வளர்த்தவருக்கு நாளடைவில் அதன் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிய ஆரம்பித்தன. அதாவது பிற நாய்களைப் போல இல்லாமல் நியோ யாரிடமும் ஒட்டவில்லை.

அடிக்கடி வெளியில் ஓடுவது, வேலியோரங்களை எளிதாக தாண்டிக் குதிப்பது, பள்ளம் தோண்டுவது என ’துறுதுறு’வென இருந்தாலும் பிற நாய்களுடன் நியோ நட்பு பாராட்ட விரும்பவில்லை.

அந்த வாலிபரின் கட்டளைக்கு மட்டும் கீழ்ப்படிந்த நியோ மீது நாளடைவில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து நியோவை அரிசோனா மனித சமூக மையத்திற்கு அழைத்து சென்று அந்த வாலிபர் தீர்வு காண முயன்றார்.

சோதனையில் நியோ ஒரு நாய் அல்ல அது ஒரு ஓநாய் என கண்டறியப்பட்டது. ஓநாயை வளர்க்க அரிசோனா மக்கள் அமைப்பு தடை விதித்ததைத் தொடர்ந்து கலிபோர்னியா ஓநாய்கள் காப்பகத்தில் நியோ ஒப்படைக்கப்பட்டது. தனது இனத்துடன் இணைந்த நியோ தற்போது மகிழ்ச்சியுடன் அந்தக் காப்பகத்தில் வாழ்ந்து வருகிறது.

நாய்க்குட்டி என நினைத்து ஓநாயை வாலிபர் வளர்த்த சம்பவம் அரிசோனா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டை, கிராம்பு கலந்த பானத்தை இரவு தூங்கும் முன் பருகுங்கள்: நன்மைகளோ ஏராளம்…!!
Next post உரிமையாளரின் இரட்டை குழந்தை பிறந்தநாளில் 2 கன்றுகளை ஈன்ற பசு…!!