திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் – 16 பேர் பலி…!!
Read Time:1 Minute, 25 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்திற்கு மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்பர் மாகாணத்தில் உள்ள அம்ரியாட் அல்-பல்லூஜா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஈராக் நாட்டின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளை மீட்கும் பணியில் ஈராக் படைகள் தொடர்ச்சியாக ஈடுபட்டும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating