முதுமையை தள்ளிப்போட வேண்டுமா? இந்த 5 மூலிகைகள் அவசியம்…!!

Read Time:3 Minute, 39 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1அழகாக இருப்பதும் வயதாவதை தள்ளிப்போடுவதும் நமது மரபில் மட்டுமல்ல, அரிய மூலிகைகளிலும் இருக்கிறது. சில மூலிகைகள் உங்கள் இளமையை தக்க வைக்கின்றன.

இன்றைய காலங்களில் முதுமை 30களிலேயே வருகிறது. உணவு, ரசாயன அழகு சாதனங்கள் மன அழுத்தம் இவையெல்லாம்தான் இதற்கு முக்கிய காரணம்.

நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சியால் நமது முதுமையை நாம் தள்ளிப்போடலாம். அதற்கு இந்த 5 மூலிகைகள் போதும்.

ஜின்செங்க் – (குண சிங்கி):

இது ஆசியா மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். சரும செல்களை புதுப்பிக்கும். இது போதாதா இள்மையாக இருக்க. அதோடு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். பளபளப்பான சுருக்கமில்லா சருமத்தையும், உடலுக்கு பலத்தையும் தரும்.

பில்பெர்ரி:

பில்பெர்ரியில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. முதுமையை தடுக்கும். புதிய செல்களை உருவாக்கும். சுர்க்கம், தழும்பை மறைய வைக்கும். சாப்பிடவும், சருமத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

ஜிங்கோ:

இது ஜிங்கோ என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ரத்த குழாயை சுத்தப்படுத்தும் அதிக ஆக்ஸிஜன் மூளைக்கும் கண்களுக்கும் செல்ல உதவுகிறது. முதுமைக்கு எதிராக போராடுகிறது. சருமத்திற்கு போஷாக்கு அளித்து பொலிவாக வைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

வல்லாரை:

வல்லாரை மருத்துவ குணங்கள் பெற்றவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இது அழகிற்காகவும் உபயோகபப்டுத்தப்படுகிறது. இது சரும செல்களை புதுப்பிக்கிறது. சுருக்கங்களை தடுக்கும். அதிக ஆக்ஸிஜனை உடலில் பெற உதவும். இளமையாக இருக்க வல்லாரை மிக முக்கியமான மூலிகை.

மஞ்சள்:

மஞ்சள் எளிதில் கிடைத்தாலும் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதில் அத்தனை அரிய குணங்கள் பெற்றுள்ளன. இது மிகச் சிறந்த முதுமையை தடுக்கும் மூலிகையாகும். சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. சுருக்கங்களை தடுக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சை அருகே கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவன்-மனைவி கைது…!!
Next post பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதன் கைது…!! வீடியோ