தனிப்படுக்கையறை! தம்பதிகள் சொல்லும் ரகசியம் என்ன?

Read Time:3 Minute, 15 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2முந்தைய காலத்தில் கணவன்- மனைவி ஒரே படுக்கையறையில் உறங்குவதையே விரும்புவார்கள், இதுவே அவர்களது உறவுக்கு பலமாக அமையும்.

தன்னுடைய அன்பான கணவர் தன் அருகில் உள்ளார், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மனைவி நிம்மதியாக தூங்குவாள்.

ஆனால் தற்போதைய காலத்திலோ பெரும்பாலான தம்பதிகள் கணவன் தனி அறையிலும், மனைவி தனி அறை என்றும் இருவரும் தனித்தனியாக படுக்கை அறையில் தூங்கும் பழக்கத்தை விரும்பி வருகின்றார்கள்.

தம்பதிகள் தனிமையை விரும்புவது நல்லதா?

தனிமையை விரும்பும் தம்பதிகள், மனக்கசப்பிலோ அல்லது கட்டுப்பாடு விதித்துக் கொண்டு இப்படி தனியறையில் தூங்குவதில்லை.

நாங்கள் சுமுகமாக வாழ்வதற்கு தேவையான இடைவெளி விட்டு வாழ்கின்றோம் என்று கூறுகின்றார்கள்.

அதிலும் சராசரியாக 40 வயதைத் தொடும் தம்பதிகள் தான் பெரும்பாலும் தனியறை தூக்கத்தை விரும்புகிறார்கள்.

ஏனெனில் கணவன், மனைவி இருவரும் ஒருவித புரிதலுடன், தனிமையை விரும்பி வாழ்கிறார்கள்.

குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் நலன்களைக் கருதியும், ஆண்கள் தங்கள் பணி நிமித்தமாகவும் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக தம்பதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் இது குறித்து உளவியலாளர்கள் ஆராய்ந்த போது, தம்பதிகள் தனிமையை விரும்பும் பழக்கமானது, மனோரீதியாகவும் சில நல்ல பலன்களைத் தருகிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான தனிமையை விரும்பும் தம்பதிகள் அவர்களுக்கு இடையே உள்ள இணைப்பையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.

கணவன், மனைவி வாழ்க்கையில், பிரிவுகள் ஏற்படுவதைப் போல தெரிந்தால், தனிமையை விரும்பும் படுக்கை அறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அதுவே அவர்களின் நிரந்தரமான பிரிவை ஏற்படுத்திவிடும் ஆபத்துக்களும் உள்ளது என்று உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பால் சுரக்க: தினமும் ஒருபிடி வேர்க்கடலை…!!
Next post விவரிக்க முடியாத ரத்த நீர்வீழ்ச்சி…இயற்கையின் மர்மம்…!! வீடியோ