ஏ.டி.எம் வரிசையில் நின்ற காதலன்.. புரட்டி எடுத்த காதலி: அதிர வைக்கு காரணம்…!!

Read Time:2 Minute, 42 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70மகாராஷ்டிராவில் ஏ.டி.எம் வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் காதலனை, காதலி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின், நாசிக் பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று உள்ளனர்.

அப்போது 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென்று அவ்வரிசையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளார்.

ஆத்திரம் தீராத அப்பெண் தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பலரை போனில் தொடர்பு கொண்டு அப்பகுதிக்கு வரவழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இளைஞனை கண்டவுடன் கடும் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவர்களை இடைமறித்து தடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். மருத்துவமனையில் இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்துகையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிசாரிடம் அப்பெண் கூறுகையில், தானும், குறித்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும், அதன் பின் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வரைக்கும் சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் திடீரென்று திருமணம் நெருங்கி வரும் வேலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின் அவரைக் கண்டு நான்கு ஆண்டுகள் சென்று விட்டது. தற்போது திடீரென்று அவரை ஏ.டி.எம். வாசலில் கண்டதால் ஆத்திரம் தாங்க முடியாமல் தாக்கியதாக கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேலில் பாரிய தீ விபத்து ..! அணைக்க முடியாது போராடும் படை வீரர்கள்…!!
Next post துருக்கியில் கவர்னர் அலுவலகத்தில் கார் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி..!!