அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்…!!
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித் மற்றும் அக்ஷரா ஹாசன் பங்கேற்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், விவேக் ஓபராய் தற்போது அஜித் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், ‘ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் கலந்து கொள்ள உள்ளேன். அஜித் அண்ணா அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லனாக அக்ஷய்குமார் நடித்து வருவதை அடுத்து இன்னொரு பிரபல பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் ‘தல 57’ படத்தில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஜித் 57 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
Average Rating