நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஏழு வயது சிறுமி..!!

Read Time:2 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2ஏழு வயதேயான சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் தாய்- தந்தையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல வெளியாகியிருக்கும் வீடியோ பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் Andrew Brown. இவர் தன் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவரின் இளைய மகள் பெயர் Hayley(7), துறுதுறுவென இருந்த அவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்களிடம் சென்று காட்டிய போது Hayley வுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் Hayley இருப்பதை அவர் தந்தை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த சிறுமி தன் தாய், தந்தையுடன் உட்கார்ந்திருப்பது போலவும் அவள் தந்தை அந்த சிறுமிக்கு பிடித்த இசையை கிடார் மூலம் இசைப்பது போலவும் உள்ளது.

மேலும் சிறுமி Hayley வுக்கு பிடித்த பேட்மேன் உடையை அவர் தாய் அவருக்கு அணிவிக்கிறார்.

அந்த உடையை அணிந்ததில் மகிழ்ச்சியடைந்த சிறுமி பின்னர் ரேடியோதெரபி சிகிச்சையை மருத்துவர்களிடம் எடுத்து கொள்வது போல அந்த வீடியோவில் உள்ளது.

இதுகுறித்து சிறுமி Hayley யின் தந்தை Andrew கூறுகையில், என் மகளுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து நானும் என் குடும்பமும் நொறுங்கி போனோம். இதனால் அவள் படும் கஷ்டங்கள் ஏராளம்.

அவள் முடியை முழுவதும் சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள். அவளின் ஒரு கண் ரெப்பையிலும் பிரச்சனை ஏற்பட்டு மிகவும் துன்பப்படுகிறாள்.

ஆனாலும் அவள் தைரியத்தை விடவில்லை, அது தான் எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் சிறுமி Hayleyயின் மருத்துவ செலவு அதிகமாகி கொண்டே வருவதால் அவரின் தந்தை, பொது மக்கள் சிகிச்சைக்காக நன்கொடை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை காலால் மிதித்து பந்தை போன்று தூக்கி வீசிய பெண்: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
Next post 5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ…!!