வீட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள்…!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய கல்லாறில் நேற்று(24) பிற்பகல் வீடு ஒன்று உடைக்கப்பட்டு பெருமளவான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியராகப் பணியாற்றும் கணவன்-மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்று திரும்புகையில் வீடு உடைக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
வீட்டின் பின்பகுதியை உடைத்து உள் நுழைந்தே இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது 12 பவுண் தங்க நகைகளுடன் 72,000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating