33 கிலோ எடை குறைத்தது எப்படி? இதோ அதன் ரகசியம்…!!
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள்.
ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான முயற்சி செய்து அதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் மட்டும் தான் உடல் எடையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.
உடல் எடை குறைக்க கடும் முயற்சியை மேற்கொண்ட இந்தியாவின் இன்ஸ்டா குயினாக திகழும் சப்னா வியாஸ் படேல் என்பவர் ஒரே வருடத்தில் உடல் எடை குறைத்து கட்சிதமான உடலமைப்பை பெற்றுள்ளார்.
சப்னா என்பவர் யார்?
சப்னா படேல் என்பவர் அகமதாபாத் சுகாதார அமைச்சரின் மகள். இவர் ஒரு ரீபோக் சர்டிஃபைடு ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஆவார்.
இவர் பலர் உடல் எடையை குறைக்க ஊக்கமளிப்பதுடன், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தன்னால் முடிந்த வரை குறிப்புகள் வழங்கி வருகிறார்.
சப்னா வியாஸ் படேல் அவரின் உடல் எடையை குறைத்தது எப்படி?
சப்னா முதலில் 83 கிலோ எடையை கொண்டிருந்தார். பின் இவர் உடல் எடை குறைப்பில் எடுத்த கடுமையான முயற்சியால், ஒரே வருடத்தில் 33 கிலோ எடையை குறைத்து, தற்போது 53கிலோ எடையுடன் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோற்றமளிக்கின்றார்.
சப்னா உடல் எடை குறைப்பதற்காக முதலில் டயட் இருக்கிறேன் என்று சரியாக முறையில்லாமல் குறைவான உணவு உட்கொண்டு வந்துள்ளார் ஆனால் அதில் எந்தவிதமான பயன்களும் கிடைக்கவில்லை.
பின் சப்னா அவர்கள் அந்த முறையை விட்டு, நிறைய ஊட்டச்சத்துக்கள், டயட், உடற்பயிற்சி பற்றி படித்து அந்த மாதிரியான முறையை பின்பற்றி ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறேனோ, அவ்வளவு உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கினார்.
இதனால், சப்னா வேகமாக அதிக உடல் எடை குறைத்து, பின் உடம்பில் உள்ல கெட்டக் கொழுப்புகளை குறைப்பதற்கு, அதிக கவனம் செலுத்து, ஒரு மணிநேரம் நடப்பது, எடை தூக்கு பயிற்சி செய்வது இது போன்ற பல உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்து வந்தேன்.
இதனால் எனக்கு ஒரே வருடத்தில் 33கிலோ எடை குறைந்து நல்ல பலன் கிடைத்தது. என்றும் இந்த உடற்பயிற்சியை செய்ததின் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று சப்னா கூறுகிறார்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating