202 பேரை பலிகொண்ட 3 தீவிரவாதிகளின் மரண தண்டனை தள்ளி வைப்பு

Read Time:1 Minute, 21 Second

Indonesia.Map.jpgஇந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் உள்ள இரவு விடுதிகளில் கடந்த 2002-ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ‘ஜெமா இஸ்லாமியா’ என்ற இயக்கத்தை சேர்ந்த இமாம் சமுத்ரா, அம்ரோசி, அலி குப்ரான் ஆகிய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு உள்பட பல்வேறு கோர்ட்டுகளில் இவர்கள் தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வாரம் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மரண தண்டனை குறித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோர போவதாக தீவிரவாதிகளின் வக்கீல்கள்ëஅறிவித்துள்ளனர். இதனால் மரண தண்டனையை இந்தோனேசியா அரசு தள்ளி வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எகிப்து நாட்டில் ரெயில்கள் மோதலில் 80 பேர் சாவு
Next post உக்ரைன் நாட்டில் ரஷிய விமானம் நொறுங்கி விழுந்து, 171 பேர் சாவு