துருக்கியில் பயங்கர தீவிபத்து: பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பலி…!!

Read Time:2 Minute, 0 Second

201611300706158715_12-dead-mainly-schoolgirls-in-turkey-dorm-fire_secvpfதுருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதனா பகுதியின் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீட்டில் உள்ள மர பொருட்கள் அனைத்தும் தீயில் கொளுந்துவிட்டு எரிந்தது. மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவியதால் வீட்டின் கதவினை திறந்து கொண்டு வெளியே வர முடியாததால் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். சிலர் தப்பிக்க ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.

இந்த விபத்தில் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து அதனா பகுதி கவர்னர் மஹ்மத் டெமிர்டஸ் கூறுகையில், “நம்முடைய குடிமக்கள் 12 பேரை தீ விபத்தில் இழந்துள்ளோம். அதில் 11 பேர் பள்ளி மாணவிகள். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த மாணவிகளுக்கு 11-14 வயது வரை இருக்கும்.

முதல் கட்ட தகவலின் படி மின்சார கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கும் என்று தெரிகிறது. நாளை முதல் விபத்து குறித்து விசாரணை நடைபெறும்.” என்று தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 117வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான பாட்டி…!!
Next post கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த 2 பேர் உடல்கள் மீட்பு…!!