தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன்: கைதான மகன் வாக்குமூலம்..!!

Read Time:5 Minute, 13 Second

201611301536394769_tirupathur-near-mother-sister-father-murder-case-son-arrest_secvpfகாதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய்-தங்கையை கொன்றுவிட்டு தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் அருகே பெற்றோரையும், தங்கையையும் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). மின்வாரிய அதிகாரி. இவரும், அவரது மனைவி ராஜேஸ்வரி (43), மகள் சுகன்யா (24) ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

மோகனின் மகன் தமிழரசன் (27) மார்பில் காயத்துடன் மயங்கி கிடந்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தமிழரசனிடம் விசாரித்த போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது தனது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தந்தை, தாய், தங்கை ஆகிய 3 பேரையும் தமிழரசனே கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்து வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் ஓசூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். உடன் வேலை செய்த இளம்பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

எனது காதலிக்கு நான் பணம் செலவு செய்து வந்தேன். எனது பெற்றோர் ரூ.2 லட்சம் சீட்டு பணம் எடுத்து வீட்டில் வைத்திருந்தனர். அந்த பணத்தையும் எடுத்து நான் எனது காதலிக்கு செலவழித்தேன்.

எங்கள் காதல் விவகாரமும், பணத்தை எடுத்து செலவிட்டதும் எனது தங்கை சுகன்யாவுக்கு தெரியவந்தது. கொலை நடந்த அன்று இரவு அவள் இது பற்றி எனது தாயிடம் கூறினார்.

என்னை எனது தாய் கண்டித்தார். அப்போது வீட்டில் எனது தந்தை இல்லை. என்னை திட்டிய தாய், ‘‘அப்பா வீட்டுக்கு வரட்டும். சொல்கிறேன் பார்’’ என்று கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர்களை கொலை செய்ய முடிவு செய்தேன். என்னை திட்டியபின்னர் எனது தாயும், தங்கையும் தூங்க சென்றனர். ஆத்திரத்தில் இருந்த நான் தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் தலை மீது முதலில் கல்லை தூக்கிப்போட்டேன்.

பின்னர் எனது தாய் தலை மீதும் கல்லை போட்டேன். தொடர்ந்து 2 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றேன். இதை எனது தந்தை பார்த்தால் நான் செய்தது வெளியே தெரிந்து விடுமே என்று பயந்தேன்.

எனவே அவரையும் கொன்று விட்டு மர்ம நபர் வந்து கொலை செய்ததாக நாடகமாட நினைத்தேன். அதன்படி எனது தந்தைக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தேன்.

அவர் வீட்டுக்கு வந்ததும் தாயும், தங்கையும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு என் மீது ஆத்திரம் அடைந்தார். அப்போது எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எனது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

நான் எனது தந்தையை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்றேன். பின்னர் குளியலறைக்கு சென்று குளித்தேன். வீட்டில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதை பார்த்ததும் நான் வெட்டுக்காயம் ஏற்பட்டு மயங்கி கிடப்பதுபோல நடித்தேன். ஆனால் என்னிடம் விசாரணை நடத்திய போலீசார் அதை கண்டு பிடித்து என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தான நேரத்திலும் காதல் மனைவிக்கு போன் செய்த வீரர்! சில நிமிடங்களில் உயிர் பிரிந்த துயரம்…!!
Next post வடபழனியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது…!!