‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!!

Read Time:1 Minute, 41 Second

201611301622522920_vijay-bairavaa-shooting-wrapped_secvpfபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகித்சவா, சதீஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

60-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜய புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற விருக்கிறது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!!
Next post உலகத்தில் உலா வரும் பெண்களின் உடல்களை பற்றிய சில தவறான கருத்துக்கள்…!!