கற்பழிப்பு வழக்கில் பிரபல பிரித்தானியா பாடகர் அதிரடி கைது! அதிர வைத்த சம்பவம்…!!

Read Time:1 Minute, 55 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5பிரித்தானியாவில் பிரபலமான JLS பாப் இசைக்குழுவின் நட்சத்திர பாடகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்குழுவின் நட்சத்திர பாடகரான Oritsé Williams கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயது பெண் ஒருவர் அளித்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்தே பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், கடந்த டிசம்பர் 2ம் திகதி Wolverhampton பகுதியில் உள்ள கிளப் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு பின்னர். Oritsé Williams அவரது ஹொட்டல் அறைக்கு பெண்ணை அழைத்துள்ளார்.

அழைப்பை ஏற்ற பெண் அவரது தோழி ஒருவருடன் அறைக்கு சென்றுள்ளார். அங்கு Oritsé Williams மற்றொரு நபருடன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

சிறது நேரத்தில் இரு பெண்களும் சென்றுள்ளனர். அதில், ஒரு பெண் ஹொட்டல் அறையில் மறந்து விட்ட தனது உடைமைகளை எடுக்க சென்ற போது தவறு நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாடகர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர்.

தற்போது, பெப்ரவரி மாதம் வரை கைது செய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதால் அதன் பின் நிலுவையில் உள்ள விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்காக புகைப்பட கலைஞர் செய்த வேலை! ஆச்சரியத்தில் உறைய வைக்கும் புகைப்படம்…!!
Next post ராணிப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: உறவினர் கைது…!!