பாதசாரியின் உயிரை குடித்த கார் ரேஸ்: ஓட்டுனர்களுக்கு கடும் தண்டனை கிடைக்குமா?

Read Time:2 Minute, 7 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7சுவிட்சர்லாந்து நாட்டு சாலையில் கார் ரேஸ் நடத்தியபோது நிகழ்ந்த விபத்தில் பாதாசாரி ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில் ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் திகதி இரவு 34 வயதான நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்துச்சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக புயல் வேகத்தில் வந்த பி.எம்.டபள்யூ கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அந்நபர் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நபருடன் நடந்துச்சென்ற 24 வயதான நண்பருக்கும் இவ்விபத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மோதிய காருக்கு பின்னால் அதே வேகத்தில் சென்ற மற்றொரு காரும் அங்கு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக இரண்டு கார்களின் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றத்து.

அப்போது, இருவரும் கார் ரேஸில் ஈடுப்பட்டது நிரூபனம் ஆனது.

மேலும், இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையை ஏற்றுள்ள நீதிபதி இதே தண்டனையை இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள இறுதி விசாரணையில் வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!
Next post தரையில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸின் பறக்கும் தட்டு…!!