கருணாவை தனியாக அழைத்த பிரபாகரன்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது? உலுக்கி போடும் உண்மைகள்! உறைய வைக்கும் தகவல்கள்!! -பகுதி-2)

Read Time:15 Minute, 59 Second

timthumbகிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள் வராது என்பதால்..,

அவர்கள் தங்கள்இடங்களுக்கு திரும்பி காவலரண்களை பலப்படுத்தி இராணுவம் முன்னேறது தடுத்தாலே போதும் தேவை ஏற்பட்டால் அழைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டு, வடக்கு நோக்கிய படையெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த தளபதிகளான தீபன் மற்றும் துர்க்காவின் தலைமையில் அடுத்த கட்ட நவடிக்கைக்கு தயாரானார் .

ஆட்பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாணம் நோக்கிய படையெடுப்புக்கு ஆண்களைவிட பெருமளவு பெண்போராளிகளே களமிறக்கப்பட்டிருந்தனர்.

ஈழப் போர் நான்கு எனப் பெயரிடப்பட்டு அவசர அவசமாக இரண்டு முனைகள் ஊடாக புலிகளின் படையணிகள் இறக்கப் பட்டன.

யாழ் கண்டி வீதி ஊடாக முன்னேறியிருந்த புலிகள் அணியினர் சாவகச்சேரி நகரை தாண்டி கோப்பாய் பாலத்தையும் தாண்டி செம்மணி பகுதிவரை முன்னேறியிருந்தார்கள்.

அதே நேரம் யாழ் வடமராச்சி பக்கமாக முன்னேறிய புலிகளின் படையணி நாகர் கேயில் பகுதியில் பலமாக அமைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் சில காவலரண்களை மட்டுமே அழிக்க முடிந்ததோடு முன்னேற முடியாது சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் யாழ் குடாவில் இருந்த இராணுவத்தினர், புலிகள் யாழையும் பிடித்து விடுவார்கள் என்கிற பயத்திலேயே இருந்தார்கள் .

அதே நேரம் இலங்கை இராணுவத்தினர் ஒரு துப்பாக்கி ரவையை கூட எடுத்துச் சொல்ல அனுமதிக்க முடியாது சரணடைபவர்கள் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளிற்கு திரும்ப புலிகள் உதவுவார்கள் என்கிற் செய்தியும் பிரபாகரனை மேற்கோள் காட்டி உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

யாழ் குடாவில் இருந்த சுமார் 50 ஆயிரம் வரையான படையினர் புலிகளிடம் சரணடைந்து தலை குனிந்து ஏ9 பாதை வழியாக வெளியேறி வருவதை கொழும்பில் இருந்த தளபதிகளும் அரசாங்கமும் விரும்பியிருக்கவில்லை.

அப்படியொரு நிலை வந்தால் யாழில் உள்ள படையினரை பத்திரமாக கடல்வழியாக வெளியேற்ற இந்தியாவின் உதவியினை நாடியிருந்தார்கள்.

இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கூட்டணி அரசு அதற்கான ஏற்பாடுகள் செய்து இலங்கை படையினரை கப்பல் மூலம் வெளியேற்றி கேரளா பகுதிக்கு கொண்டு சென்று தங்க வைக் முடியும் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தநேரத்தில்தான்.

புலிகள் நாகர் கோயில் பக்கமாக உள்ள இலங்கை இராணுவத்தின் காவலரண்களை தாண்டி முன்னேற முடியாது நிற்பதையும் செம்மணிவரை முன்னேறியிருந்த புலிகளின் மற்றைய அணி மீண்டும் கோப்பாய் வெளியை தாண்டி சாவகச்சேரிக்கு பின் தள்ளப் பட்டிருப்பதையும் இலங்கை இராணுவ தலைமை அவதானித்து.

அரச அதிபர் சந்திரிக்கா கதிரையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் முன்னால் நெளிந்து வளைந்து கொண்டிருந்த முப்படைத் தளபதிகளும் விறைப்பாய் மிடுக்கோடு நின்றார்கள். அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கை பிறந்தது.

அதே நேரம் திடீரென புலிகளும் 24.12.2000 ம் ஆண்டு ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தம் ஒன்றினை அறிவித்தார்கள். புலிகள் யாழை கைப்பற்றுவதற்கான தங்கள் முழுப் பலத்தையையும் பிரயோகித்து பார்த்ததோடு யுத்தத்தால் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை இலங்கையரசு உணர்ந்தது.

அவசரமாக திட்டங்கள் தீட்டப்பட்டது கழற்றி எடுத்த கனரக பீரங்கிகள் எல்லாம் மீண்டும் பொருத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆயுதங்கள் குவிக்கப் பட்டது.

தங்கள் முழு பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி 25.04.2001 அன்று அதிகாலை `ஹீனிகல(தீச்சுவாலை) என்கிற நடவடிக்கையை இலங்கை ராணுவம் ஆரம்பித்தார்கள் புலிகள் பின் தள்ளப் பட்டால் தொடர்ந்து சண்டையிட்டு இழந்த ஆனையிறவையும் மீட்டுவிடுவது இலங்கையரசின் திட்டமாக இருந்தது.

மூன்று நாட்கள் நடந்த மோசமான தொடர் சண்டையில் புலிகளின் தரப்பில் சுமார் 350 பேர்வரை கொல்லப் பட்டும் ஏராளமானவார்கள் காயமடைந்து போகவும் மீண்டும் அவர்கள் சில கிலோமீற்றர்கள் முகமாலை வரை பின்னிற்கு தள்ளப்பட்டு அங்கு தங்கள் காவல்நிலைகளை புலிகள் பலப்படுத்தியிருந்தார்கள்.

இலங்கையரசு நினைத்ததைப்போல ஆனையிறவை மீண்டும் கைப்பற்ற முடிந்திருக்காவிட்டாலும் யாழ்ப்பாணத்தினை தக்கவைத்ததில் நிம்மதியடைந்திருந்தனர்.அதே நேரம் இலங்கை இராணுவமும் களைத்துப் போயிருந்ததால் ஒரு யுத்த நிறுத்தத் திற்க்கு உடன்பட்டனர் .

பிரபாகரனின் திட்டத்தின் படி யாழ் நோக்கியா படையெடுப்பு தோல்வியில் முடிந்து போக கிடைத்த அவகாசத்தில் அவசரமாக அடுத்த திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார்கள்.

அடுத்த திட்டம் என்னவெனில் ஆட்பற்றாக்குறையை போக்குவதற்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த அனைவரிற்கும் ஆயுதப்பயிற்சி கொடுப்பது.

அதாவது கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துவது.

வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் புலிகளில் இனைய வேண்டும் என்கிற பிரசாரத்தை அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கடுமையாக்கினார்.

எப்படியும் பத்தாயிரம் பேரையாவது இணைப்பது என்பது அவரது இலக்கு .அதற்கு உறுதுணையாக அரசியல் மகளிர் துறைப்பொறுப்பாளர் தமிழினியும் வேகமாக இயங்கினார்.

பதினைந்து வயதிற்க்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர் மறுத்தவர்கள் பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டனர் .

திருமணமானவர்களை புலிகள் படையில் சேர்க்காது விட்டிருந்ததால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பதினெட்டு வயதிற்கு முன்னர் பால்ய திருமணங்களை நடத்த தொடங்கியிருந்தனர்.

அதனால் புலிகள் புதிதாக திருமனமானவர்களையும் தேடித் தேடிப்பிடித்து பயிற்ச்சி முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்தக் கால கட்டத்தில் தான் உலக ஒழுங்கையே மாற்றியமைத்த அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதல் 11.09.2001 நடந்தேறுகின்றது.

இதனையடுத்து உலகப் பந்தில் ஒரு அரசு தவிர்ந்த அனைத்து போராட்ட ஆயுதக்குழுக்களுமே பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அந்த அமைப்புக்களை பட்டியலிட்டு தடையும் செய்தது அவர்கள் தயாரித்த பட்டியலில் புலிகளின் பெயரையும் இணைத்து விட்டிருந்தார்கள்.

இந்தப் பட்டியலை ஜரோப்பிய ஒன்றிமும் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதனையடுத்து புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என மீண்டும் அறிவிக்கவே நோர்வே சமாதான பேச்சு வார்த்தைகளிற்கு உதவுவதாக அறிவித்திருந்தாலும்.

அன்றைய சந்திரிக்கா அரசு அதனை இழுத்தடித்துக்கொண்டிருந்த நேரம் 2001ம் ஆண்டு வருட இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று பிரதமரானதைத் தொடர்ந்து ரணிலும் பிரபாகரனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ரணில் ஏற்கனவே மேற்குலகத்திற்கு சார்பானவர் என்பதால் மேற்குலக நாடுகளும் இலங்கை பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தாலும் ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகளை புலிகளே குழப்பிருந்ததால் அவர்கள் இந்தத் தடைவையும் பேச்சுவார்தைகளை குழப்பாமல் கவனிக்கவும் பேச்சுவார்த்தையை குழப்ப இருதரப்புமே முயற்சிக்கலாமென்பதால் நோர்வே. சுவீடன், பின்லாந்து, டென்மார்க். ஜஸ்லாந்து அகிய நாட்டு உறுப்பினர்கள் அடங்கிய யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்தார்கள்.

இலங்கையில் மீண்டுமொரு சமாதான காலம் துப்பாக்கி சத்தம் இல்லாதுபோய் புலிகளும் ஆயுதமின்றி அரசியல் பிரிவினர் யாழ்பாணத்திற்குள் பிரவேசித்திருந்தார்கள்.

அதே நேரம் புலிகளின் புலனாய்வு பிஸ்ரல் குழுவினரும் யாழிற்குள் நுளைந்து இராணுவத்துடன் இணைந்து இயங்கியவர்களை போட்டுத்தள்ளத் தொடங்கியிருந்தார்கள் இவை யுத்தமீறல்களாக பதிவாகிக் கொண்டிருந்தது.

பேச்சு வார்த்தைகளுக்கான ஏற்பாடுகளையும் வரைபுகளையும் மேற்குலகம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தது .

அப்போது தான் கருணாவை மட்டும் தனியாக சந்திக்கும்படி பிரபாகரனிடமிருந்து அழைப்பு கிடைக்கிறது.

இது கருணாவும் எதிர்பார்த்த அழைப்புத்தான்.

பிரபாகரன் முன்னால் போய் நின்ற கருணாவிடம் “கிழக்கு மாகாணம் நோக்கிய படையெடுப்பு ஆலோசனையை கேட்காமல் வடக்கு நோக்கி நகர்ந்தது தவறுதான். பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது.

இந்த பேச்சு வார்த்தையில் வழக்கம் போலவே எனக்கு நம்பிக்கையில்லை. இந்தக் காலத்தை நாம் பயன்படுத்தி மீண்டும் எம்மை பலப் படுத்த வேண்டும்.

அடுத்ததாக ஒரு புதிய தாக்குதல் திட்டம் என்னிடம் உள்ளது. அதுதான் எமது இறுதித் தாக்குதலாக இருக்கும்.

அதோடு வடக்கு கிழக்கு முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தமிழீழப் பிரகடனம் செய்து விடலாம். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை அங்கீகரிப்பதை தவிர வேறு வழி இல்லை.

அவகளுக்கு ஓயாத அலைகள் மூன்றிட்கு நீ கொடுததைப் போலவே, இந்த இறுதி தாக்குதல் திட்டத்திற்கு மீண்டும் உன்னுடைய பெரும் ஆதரவும் உதவியும் தேவை” என்று சொல்லி நிறுத்தி கருணாவை பார்த்தார்.

எப்போதுமே பிரபாகனுக்கு என்ன தேவை? என்பதை அவர் கேட்பதற்க்கு முன்னரே உணர்த்து கொள்ளும் கருணாவிற்கு, இந்தத் தடவையும் என்ன கேட்கப் போகிறார்? என்பது புரிந்திருந்தது.

ஆனாலும் வழமைக்கு மாறாக புரியாதது போலவே மௌனமாக நிற்கவே, கருணாவின் மௌனத்தை தெரிந்து கொண்ட பிரபாகரன்.

தன் குரலை உயர்த்தி “இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து பயிற்ச்சி கொடுத்து மீண்டும் வன்னிக்குள் அழைத்து வா.

அதே நேரம் இங்குள்ள கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு நான் ஒரு கூட்டம் வைக்க வேண்டும் அதற்கான ஏற்பாட்டையும் செய்து முடி. நீ போகலாம் “…என்று கட்டளையிட்டார் .

கருணாவும் தலையாட்டி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் தலைவர் சொன்னது போல ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணினான்.

அங்கு பேசிய தலைவர் “விரைவில் மீண்டும் யுத்தம் தொடங்கும்.

பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனவே இறுதி யுத்ததிற்கு தயாராக இருங்கள்.

அதே நேரம் புதியவர்களை இணைக்க கருணா அம்மானுக்கு உறுதுணையாக இருங்கள்.

மீண்டும் அடுத்த யுத்தகளத்தில் சந்திப்போம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” என்று பேசி முடித்தார்.

ஓயாதஅலை மூன்று வெற்றிக்குப் பின்னர் தலைவர் போராளிகளிடம் நேரடியாகப் பேசிய முதல் கூட்டம் அதுதான்.

இங்கு தலைவர் பேசியதை கருணாவின் உதவியாளர் ஒருவர், வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

அந்த வீடியோ பதிவும் பின்னர் பேச்சு வார்த்தை மேசையில் புலிகளுக்கு நெருக்கடியை கொடுத்தது.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி – யுவன் இணையும் ஒரே மேடை..!!
Next post பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்…!!