பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

Read Time:3 Minute, 42 Second

nub7dசில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.

இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.

சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம்.

எனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது என பெண்கள் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

மரபணு!

இந்தியா, மத்திய தரைக்கடல், கிழக்கு ஆசியா, ஐரோப்பிய பெண்களுக்கு தான் அதிகமாக தேவையற்ற முடி வளர்ச்சி முகத்தில் தோன்றுகின்றன. இதற்கு காரணம் மரபணு அல்லது இனத்தின் பாரம்பரியம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை!

சில மருத்துவ நிலை தாக்கம் ஆண்களுக்கான ஹார்மோனை பெண்கள் உடலில் அதிகமாக சுரக்க செய்யும். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் முடி வளர வாய்ப்புகள் உண்டு!

மருந்துகள்!

உட்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கம் கூட உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சியை தூண்டும். இதன் காரணமாக கூட பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி தோன்றலாம். சில வகை ஸ்டெராய்டுகள் கூட இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி!

பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க மற்றுமொரு காரணமாக இருப்பது ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி. ஆண்ட்ரோஜன்கள் ஆண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்.

ஆனால்,பெண்களின் உடலிலும் சிறியளவு ஆண்ட்ரோஜன்கள் இருக்கும். ஏதேனும் தூண்டுதலால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள் கூட ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சியை தூண்டலாம். இதனாலும், பெண்களின் முகத்தில் திடீரென முடி வளர்ச்சி தோன்றவும் / அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

வேறு காரணங்கள்!

வலிப்பு, ஒற்றைத்தலைவலி, மனச்சிதைவு நோய், உயர் இரத்த அழுத்தம், போன்ற வேறு காரணங்களாலும் கூட பெண்களின் முகத்தில் முடியின் வளர்ச்சி தோன்ற வாய்ப்புகள் உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்?..!!
Next post நடிகை சாந்த்ரா தாமசை தாக்கிய நடிகர் மீது வழக்கு..!!