சோயாவை உட்கொண்டால் உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி அறிவீர்களா?..!!

Read Time:3 Minute, 39 Second

untitled-1சோயா உடலுக்கு நன்மையை தரும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதனை உட்கொள்ளக் கூடாது என பல மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

சோயா மிகச் சிறந்த புரோட்டின் உணவு என்பது ஆணித்தரமான உண்மை. மாதவிடாய் சீர்ப்படுத்தவும், ஹார்மோன் சமனிலையற்றதை சரிபண்ணவும் மிகச் சிறந்த உணவு சோயாதான்.
ஆனால் ஒரு காலத்தில் இயற்கையான முறையில் விளைவித்த சோயா நன்மைகளை தந்தது. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. சோயாவை இன்றைய காலக்கட்டத்தில் ஏன் உண்ணக் கூடாது என்று ஒரு ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார் கேளுங்கள்.

இது மரபணு மாற்றம் ஆனது :
மிக அதிகமாக மரபணு மாற்றம் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள் சோயாதான். ஆகவே மார்கெட்டுகளில் வரும் சோயா இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதல்ல. மரபணு மாற்றம் செய்த சோயா கடும் விளைவுகளை நமது உடலுக்கு தரும் .

தைராய்டிற்கு நல்லதல்ல :
சோயா போதுவாக தைராய்டு ஹார்மோன் அளவை குறைக்கச் செய்யும், ஆகவே அதிகப்படியான சோயாவை உடலில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தைராய்டு சுரப்பியை ஊக்கப்படுத்தும் ஹார்மோன் TSH அதிகரித்திருந்தால், ஹைபோதைராய்டு உண்டாகும்.
அவ்வகையில் சோயா TSH அளவை அதிகரிக்கச் செய்யும்.

புரோஸஸ்டு உணவு :
உணவின் தரம், நிறம், அளவு ஆகியவற்றை கவரத்தக்கும் விதத்தில் மாற்றும் புரோசஸ் செய்வதில் சோயாதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு புரோசஸ் செய்யப்படும் சோயா தேவையில்லாத கலோரிகளை அதிகப்படுத்தும்.

ஹார்மோன் பிரச்சனையை உண்டாக்கும் :
சோயாவில் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இது இயர்கையாக ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு சுரப்பது போல் தவாரங்களில் சுரக்கும் சத்து.
இதனை இளம் வயதில் எடுத்துக் கொள்ளும்போது ஏற்கனவே இயல்பாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பவர்களுக்கு இன்னும் அதிகளவு ஈஸ்ட்ரோஜன் உடலில் உண்டானால் அதனால் பக்க விளைவுகள் உண்டாகும். ஆனால் மாதவிடாய் நின்றவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சோயா ஒரு புதிய வகை உணவு :
நாம் காலங்காலமாக சாப்பிட்டு வந்த உணவுகளே ஆரோக்கியமான வாழ்வை நமக்கு தரும். புதிதான அறிமுகம் செய்யப்படும் எந்த வகை உணவுமே நமது உடலிலுள்ள ஜீன்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும். அதிலும் மரபணு மாற்றப்பட்ட சோயாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜீன் தடுமாறும்.

அளவுக்கு அதிகமாக சோயாவை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான மினரல் உறியப்படுவது தடுக்கிறது. அதோடு ஜீரண சக்தியும் குறையும் வாய்ப்புண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 வயதில் பிரபல பாடகருக்கு முதல் குழந்தை..!!
Next post இலங்கையர்களின் உணவில் முதலிடம் தேங்காய் தான்! இது உடலுக்கு நல்லதா?