நமது கண்கள் ஏன் அடிக்கடி துடிக்கின்றது என தெரியுமா?..!!

Read Time:2 Minute, 0 Second

maxresdefault-3கண்கள் துடிப்பது பற்றிய பல்வேறு மூட நம்பிக்கைகள் மக்களிடையே உண்டு. ஆனால் உண்மையிலேயே கண் துடிப்பது உடலில் இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. அதுமட்டுமல்ல, கண்களின் துடிப்பு நம்முடைய மனநிலையையும் குறிக்கிறது.

கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் பல உண்டு. அவற்றை அறிந்து, உங்கள் மூட நம்பிக்கையைப் போக்கிவிடுங்கள்.

நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தால் அடிக்கடி கண்கள் துடிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கணினியில் உட்கார்ந்து வேலை செய்வதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ கண்கள் வறட்சியடையும். உங்கள் கண் வறட்சி அடைந்திருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று தான் உங்கள் கண் துடிப்பது தான.

சோடா, ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுதல் வேண்டும். காபி, ஆல்கஹால் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் கண்கள் அடிக்கடி துடிக்கும்.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடலில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். அப்போது கண் தசைகளும் சுருங்கும். அதனாலும் கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்..!!
Next post சத்தீஷ்கரில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 16 பெண்கள்..!!