பெரும்பான்மையான கனேடியத் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களே…

Read Time:8 Minute, 48 Second

LTTE.Ca.thirukumaran.jpgகடந்த சில நாட்களாக கனடாவிலும் அமெரிக்காவிலும் தமிழ் கனேடியர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமை தொடர்பாக ஜனநாயகத்துக்கான கனேடியத் தமிழர்கள் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. கனடா, அமெரிக்கா உட்பட உலகின் பல பிரதான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கமான LTTE அல்லது தமிழ் புலிகள் என்னும் பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை கனேடிய வாழ் தமிழ் சமூகத்தை மிகவும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்கள் நேரடியாகவோ மறைமுகமா கவோ, இப்பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்து பணியாற்றி இருந்தார்களாயின்,அது, ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் விரும்பும் கனடா வாழ் தமிழ் சமூகத்தினரால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இக்கைதுகளின் மூலம் இவ்விளைஞர்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் இப்பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக கனேடிய மண்ணில் இருந்து கொண்டு குரல் கொடுக்கும் அமைப்புக்களும், நபர்களும். ஊடகங்களுமே பொறுப்பெடுக்க வேண்டும், என்பதையும் நாம் பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக அறிந்திராத இந்த இளைஞர்களும் மாணவர்களும், கனடாவில் புலிகள் அமைப்பின் ஆதரவில் இயங்கும் பல்வேறு அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் உந்துதலால் இன்று இந்த தவறான வழியில் செலுத்தப்பட்டு தமது எதிர்காலத்தையே இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளமை மிகவும் வருந்தத் தக்க விடயமாகும்.

கைது செய்யப்பட்ட இந்த இளைஞர்களின் குடும்பங்கள் செய்வதறியாது அவதிப்படுகையில், இந்த இளைஞர்களை தவறான வழிக்கு து}ண்டிய நபர்களும், அமைப்புக்களும், தமக்கு எதுவுமே தெரியாது என்று கையைக் கழுவிக் கொள்ளுவதை கனேடியத் தமிழ் சமூகம் கவனமாக அவதானித்து, அவர்களின் அச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கனடாவில் பிறந்து அல்லது சிறு வயது முதல் கனடாவிலேயே வள்ர்ந்து, படித்து சிறந்த அறிவாளிகளாகவும் ஜனநாயக பண்புள்ளவர்களாகவும் வரக்கூடிய இந்தக் கனேடியத் தமிழ் இளம் சந்ததியினரை, உலகசமூகமே ஒதுக்கித் தள்ளும் பயங்கரவாத அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்கு துணைபோகும்படி து}ண்டுகின்ற எந்தப் பணியையும், பொறுப்புள்ள கனேடிய தமிழ் பெற்றோரோ, தமிழ் அமைப்புக்களோ, தமிழ் ஊடகங்களோ இனிமேலும் செய்யக் கூடாது என்று ஜனநாயகத்துக்கான கனேடியத் தமிழர் அமைப்பாகிய நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தத்தின் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததால் தமது பிள்ளைகளின் எதிர்கால நலன்களைக் கவனத்திற்கொண்டே இலங்கைத் தமிழர்கள் இலட்சக்கணக்கில்; புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்றனர்.

அவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் சகல நாடுகளிலும்கூட தமிழ் சமூகத்தின் நற்பெயரை நாசமாக்கும் நடவடிக்கைகளையே தமிழ்புலிகள் இயக்கமும் அவர்களின் ஆதரவு சக்திகளும் இதுவரை செய்து வந்துள்ளமையை நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து, ஜரோப்பிய நாடுகள் முதல் தற்போது அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் தமிழ் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்கு ,வர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளமை மிகக் கசப்பான உண்மையாகும்

இப்பயங்கரவாத அமைப்பின் தலைவர்களும் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்களும், எப்போதும் தமது பிள்ளைகளையும் குடும்பங்களையும் மிகப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்துக்கொண்டு, இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஏனைய அப்பாவித் தமிழர்களின் பிள்ளைகளையே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு து}ண்டுகின்றனர். அவர்களின் இத்தகைய தார்மீகமற்ற செயற்பாடுகளையும் நாம் இவ்விடத்தில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

கனேடிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்நபர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தேதும் இல்லை.

ஆனால் மனித குலத்துக்கெதிரான நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழ்புலிகள் இயக்கத்திற்கு, சட்டவிரோதமான முறையில் ஆதரவு வழங்கும் அல்லது பணியாற்றும் இது போன்ற ஒரு சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, கனடாவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பாதிக்காத வகையில் அவை அமைய வேண்டும், என்று கனேடிய அரசாங்கத்தையும் பாதுகாப்பு பிரிவினரையும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கனேடிய மண்ணில் புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டதன் பின்னரும் அவ்வமைப்பின் வழிகாட்டலில் புதிய புதிய பெயர்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கனடாவில் இயங்கும் பல அமைப்புக்கள் பலாத்காரமாக தமிழ் மக்களிடம் பணம்பறிப்பதும், தமது நாசகார செயற்பாடுகளுக்கு ஆதரவாக தொடர்சியாக அவர்களை அணிதிரட்ட முயற்சிப்பதும் வெளிப்படையான உண்மையே.

ஆனால் சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மையான கனேடியத் தமிழர்கள் அவற்றில் இருந்து ஒதுங்கி வாழவே முயற்சிக்கின்றனர் என்கின்ற உண்மையையும் நாம் கனேடிய அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இவ்விடத்தில் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

இவ்வண்ணம்
முருகேசு கணேஷ்
இணை அமைப்பாளர்
ஜனநாயகத்துக்கான கனேடியத் தமிழர்கள்
ஆகஸ்ட் 26, 2006

********************************************************
அமெரிக்க மற்றும் கனேடியப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி சந்தேகநபர்களில்(15 பேரில்) சிலர்..

LTTE.Ca.thirukumaran.jpg
LTTE.Ca.Suresh.jpg
LTTE.Ca.Ramanan.jpg

MORE DETAILS……மேலதிக பத்திரிகைத் தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்
ltte-canada.jpg

Thanks…..WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திரிகோணமலை: ராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்
Next post புளூட்டோவின் கிரக அந்தஸ்து பறிப்பு: வானியல் அறிஞரின் மனைவி அதிர்ச்சி