ஏமனில் அமெரிக்க ராணுவ படையினரின் தாக்குதலில் 30 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி..!!

Read Time:1 Minute, 54 Second

timthumbஏமன் நாட்டில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எதிராக அல்-கொய்தா உள்ளிட்ட பல தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவத்தினர் ஏமனில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று ஏமன் நாட்டின் மத்திய மாகாணமான பாய்தாவில் உள்ள யாக்லா மாவட்டத்தில் பதுங்கியிருந்த அல்-கொய்தா இயக்கத்தினரை சுற்றி வளைத்த அமெரிக்க ராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் ராணுவத்தினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரின் தாக்குதல் முடிவில், முக்கிய 3 நபர்கள் உள்ளிட்ட 30 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலியாகினர். மேலும், ராணுவத்தினரின் தாக்குதலால் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த பொதுமக்களின் தகவல்களை ராணுவம் வெளியிடவில்லை.

கடந்த 14-ம் தேதி அல்-கொய்தா இயக்கத்தின் மூத்த தளபதி ஒருவன் ராணுவத்தின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க ராணுவமானது அல்-கொய்தா தீவிரவாதிகளை கொல்வது இது தான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகம் மீன் சாப்பிடுபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி..!!
Next post திருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை)