காஷ்மீரைச் சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு..!!

Read Time:1 Minute, 30 Second

201701311913452611_2-Kashmiri-athletes-denied-US-visa_SECVPFஅமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், மூன்று மாதங்களுக்கு 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்கவிற்குள் வரக்கூடாது என சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். டிரம்பின் இந்த உத்தரவுக்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்தனர். தங்களது அமெரிக்கப் பயணத்திற்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இரண்டு பேர்களின் விசாவை பரிசீலித்த தூதரகம், அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. தற்போதைய அமெரிக்காவின்
கொள்கைப்படி விசா மறுக்கப்பட்டதாக தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வீரர்களும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை கொடூரமாக எட்டி உதைத்த இளம்பெண்? வீடியோ..!!
Next post முதுமையில் கூன் விழுவதற்கு காரணம் என்ன?..!!