விஜய் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது: அமலாபால்..!!

Read Time:1 Minute, 46 Second

201702011821354505_Amalapaul-says-not-angry-with-director-vijay_SECVPFஇயக்குனர் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்தார். அவரை விட்டுப்பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை விஜய் மீது அவர் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா? என்று அமலாபால் இடம் கேட்டபோது அவர் அளித்த பதில்….

“அடுத்த 2 வருடங்களுக்கு சினிமாவில் நடிப்பதை தவிர வேறு நினைப்பு இல்லை. விஜய்யும் நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை. எனவே, இதை எல்லாம் கணிக்க முடியாது.

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. ஆகவே, வருவதை ஏற்று போய்க்கொண்டிருக்க வேண்டும். நானும் விஜய்யும் வாழ்வின் மற்றொரு விதத்தில் சந்தித்திருந்தால் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்திருப்போம்.

இப்போது அவரும், நானும் வேறு வேறு நிலையில் இருக்கிறோம். இரண்டு அழகானவர்கள் தவறான கதையில் சந்தித்தது போல் எங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் எனக்கு பிடித்தமானவர் அவர் தான்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலியில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ: 11 பேர் உயிரிழப்பு..!!
Next post முஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சன அத்துமீறல்கள்..!! (கட்டுரை)