பணத் தகராறில் மருமகன் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மாமனார்..!!

Read Time:1 Minute, 30 Second

imagesஅரக்கோணம் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 28). இவருடைய மனைவி விஜயலட்சுமி (25). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அரக்கோணம் அருகே பள்ளியாங்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.

சம்பவத்தன்று ஏழுமலை பள்ளியாங்குப்பத்தில் இருந்த மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஏழுமலைக்கும் அவருடைய மாமனார் குமாருக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமார், அவருடைய மனைவி சம்பூர்ணம், உறவினர்கள் வேலு, விஜி ஆகியோர் அருகில் இருந்த வெந்நீரை எடுத்து ஏழுமலையின் முகத்தில் ஊற்றியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஏழுமலை அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சன அத்துமீறல்கள்..!! (கட்டுரை)
Next post செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கியக் கட்டமாக இருக்க வேண்டும்..!!