நியூசிலாந்தில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய 400 திமிங்கலங்கள்..!!

Read Time:1 Minute, 59 Second

201702110446003972_Hundreds-of-whales-wash-up-dead-on-New-Zealand-beach_SECVPFநியூசிலாந்து கடற்கரை பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரைஒதுங்கின. இதில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துள்ளதாக அந்நாட்டு கடல்வாழ் விலங்கின அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள தங்க வளைகுடா பகுதியில் பைலட் திமிங்கலங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த வகை திமிங்கலங்கள் 20 அடி நீளம் உடையது.

இந்நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இதில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலையில், எஞ்சியுள்ள திமிங்கலங்களை காப்பாற்ற நியூசிலாந்தின் உயிரின ஆர்வல அமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் கடற்கரை பகுதியில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளன.

கரைஒதுங்கிய திமிங்கலங்களில் பல காயத்துடன் இருப்பதால், அவற்றிற்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்ட பிறகு திமிங்கலங்கள் மீண்டும் கடலில் கொண்டு விடப்பட்ட நிலையில், அவை மீண்டும் கரைஒதுங்கியதால் கடல்வாழ் விலங்கின அமைப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திமிங்கலங்களின் உயிரிழப்பு குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது 1918ம் ஆண்டில் சதாம் தீவு பகுதியில் அதிகபட்சமாக 1000 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. ஆக்லாந்தில் 1985ம் ஆண்டு 450 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்..!!
Next post வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி..!!