ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?..!!

Read Time:5 Minute, 4 Second

201702121355345709_governor-do-not-called-to-sasikala-do-she-next-action_SECVPFஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் உருவாகிவிட்டது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரையில் 8 எம்.பி.க்களும், 6 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் இன்று ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் அவருக்கு ஆதரவு பெறுகி வருகிறது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரியும், அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகவில்லை.

இதனால் கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சசிகலா, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அடுத்த கட்ட போராட்டம் வேறு மாதிரி இருக்கும் என்று கூறி இருந்தார்.

சசிகலாவின் இந்த ஆவேச பேட்டி அரசியல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. எங்களது போராட்டம் வேறு மாதிரி இருக்கும் என்று மட்டும் கூறிய சசிகலா அது எந்த மாதிரியான போராட்டமாக இருக்கும் என்பதை தெளிவு படுத்தவில்லை. இதனால் சசிகலாவின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பது பற்றி பல்வேறு யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி 3 விதமான திட்டங்களை சசிகலா மனதில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்று, கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் சென்று ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருப்பது.

இன்னொன்று கவர்னர் அனுமதி அளிக்கும் பட்சத்தில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்துக் கொண்டு கவர்னர் மாளிகைக்கு செல்வது.

3-வதாக, எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் முறையிடுவது என 3 திட்டங்கள் சசிகலாவின் மனதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ஏதாவது ஒரு முடிவை சசிகலா இன்று கண்டிப்பாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று எம்.எல். ஏ.க்களுடன் அவர் உண்ணாவிரதம் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போயஸ் கார்டனில் சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலையில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு வந்திருந்தனர். எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோரும் மதியம் வந்தனர். இதுபோன்று கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுடன் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி, சசிகலா ஆலோசனை நடத்தி வரு கிறார். போயஸ் கார்டனுக்கு வெளியேயும் கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

சசிகலாவின் முடிவுக்காக அவர்களும் காத்திருக்கிறார்கள். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அங்கு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சமரசம், போயஸ்கார்டனுக்கு வெளியே அளித்த பேட்டியில் கூறும்போது, சசிகலாவை, கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்காதது ஜனநாயக விரோதம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சசிகலா ஆலோசனை நடத்தி அறிவிப்பார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வார இறுதியில் பொலிவிழந்த முகத்தைப் பிரகாசமாக்க வேண்டுமா இதோ சில வழிகள்..!!
Next post சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? அதைப் படிங்க மொதல்ல..!!