முதன் முறையாக விண்வெளி ஆய்வகத்தில் முட்டைகோஸ் அறுவடை..!!

Read Time:2 Minute, 0 Second

201702191010172807_Cabbage-harvested-aboard-space-station-Nasa_SECVPFஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.

அதை தொடர்ந்து சமீபத்தில் முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் சீன முட்டை கோஸ் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-வது பயிர் ஆகும். மேலும் விண்வெளி ஆய்வகத்தில் தற்போதுதான் முட்டை கோஸ் முதன் முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கிவிட்சன் டுவிட்டரில் கூறும் போது எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் விண்வெளியில் வேடிக்கையாக நான் தோட்டம் அமைத்தேன். இது போன்று அதிக தோட்டம் போட நிறைய அறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினச்சேர்க்கையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!!
Next post ரஜினி படத்துக்கு ரூ,20 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு..!!