காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகிறது; சுத்தம் செய்யும் பணியில் பரவிப்பாஞ்சான் மக்கள்..!!

Read Time:2 Minute, 10 Second

sdfdfகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.

அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

அத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.

எனினும், குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ..!!
Next post உடையாத நீளமான நகம் பெற வேண்டுமா இப்போ இந்த சாய்ஸ் ட்ரை பண்ணுங்க..!!