கனடாவில் பயங்கரம்! தீயில் கொளுந்து விட்டு எரிந்த வீடு: ஒருவர் பலி..!!
கனடாவில் உள்ள ஒரு வீட்டை மர்ம நபர் தீவைத்து கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள Kawartha பகுதியில் உள்ள வீட்டில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து வசித்து வருகிறார்கள்.
நேற்று அந்த வீடு உள்ள பகுதியிலிருந்து தீயணைப்பு நிலையத்துக்கு அவசர உதவி கேட்டு போன் வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்த போது அங்கு இளைஞர்கள் தங்கியிருக்கும் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
விரைந்து செயல்பட்ட தீயணைப்பு படையினர் கஷ்டப்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரு இளைஞர் உயிரிழந்தார். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர சம்பவத்துக்கு காரணமான ஒரு இளைஞரை பொலிசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating