முகப்பருவை கையால் கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

Read Time:2 Minute, 35 Second

201702281352526667_pimples-Effects-popping-pimples_SECVPFமுகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின் முடிவெடுங்கள்.

பிம்பிளில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த பிம்பிள் மிகவும் தீவிரமாகக் கூடும்.

பிம்பிளைக் கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த பிம்பிளைச் சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

அசுத்தமான கையால் பிம்பிளைத் தொடும் போது, பிம்பிளில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் பிம்பிள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

பிம்பிளைக் கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த பிம்பிள் மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இதுவரை பிம்பிளைக் கையால் கிள்ளுவதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் குறித்து கண்டோம். இனிமேலாவது முகத்தில் பிம்பிள் வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். பிம்பிளை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகிகள் இடையே போட்டி, பொறாமை இல்லை: தமன்னா..!!
Next post சுயஇன்பத்தில் ஈடுபடும்போது செய்ய வேண்டியவை..!! (பெண்களுக்கு மட்டும்)