குடியிருப்பில் மோதி நொறுங்கிய விமானம்: வீட்டில் இருந்தவர்கள் நிலை?..!! (வீடியோ)

Read Time:2 Minute, 28 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி நொறுங்கியதில் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி உட்பட ஐந்து பேர் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

சென்று கொண்டிருந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த வீடுகளின் மீது மோதியுள்ளது, இதில் இரண்டு வீடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

விழுந்து நொறுங்கிய விமான கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியை புகை மூட்டம் சூழ்ந்தது.

ஆனால் இதில் ஒரு இளம்பெண் மட்டும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கிட்டத்தட்ட இச்சம்பவத்தால் 4 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் அந்தநாட்டு உள்ளூர் நேரப்படி 4.40 pm நடந்ததாக கூறப்படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கியது தீயணைப்பு படையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் உயிர் இழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது வீட்டில் தங்கியிருந்தவர்களா என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தீயணைப்பு படை சார்பில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், விமானம் விபத்திற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடைகளை தாண்டி எழுந்து வருவேன்: பாவனா உறுதி..!!
Next post தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு: மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவு..!!