கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்..!!

Read Time:8 Minute, 0 Second

201703011118094735_hospital-pregnancy-tests_SECVPFஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் ஓர் அற்புத தருணமே தாய்மை. ஒரு உயிரை உருவாக்கும் அதிசயம் கருவுருதல் ஆகும்.

நவீன தொழில் நுட்ப வசதிகளும் பரிசோதனைகளும் புதிய உயரத்தினை எட்டியுள்ள இன்றைய காலத்தில் கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.

கர்ப்பம் அறிய சிறுநீர் பரிசோதனை :

மாதம் மாதம் தொடர்ந்து சரியாக மாதவிலக்கு ஆகக்கூடிய பெண்களுக்கு ஒன்று, இரண்டு நாள் தள்ளிப் போனாலே கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிகாலை சிறுநீரைப் பரிசோதனை செய்வதே நல்லது. இப்பரிசோதனையில் ஹியூமன்கோரியானிக்கொன டோட்டிராபிக் ஹார்மோன் (Human Chorionic Gonadotrophic Hormone – HCG) சிறுநீரில் இருக்கிறதா? என்பதனைச் சோதிக்கப்படும்.

கர்ப்பம் அறிய இரத்தப்பரிசோதனை அவசியமில்லை :

சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வந்தால் இரத்தத்தில் உள்ள HCG ஹார்மோன் அளவினைப் பரிசோதித்து உறுதி செய்வது வழக்கம்.

கர்ப்பத்தினை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் அவசியம்.

கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் எடையானது அரைகிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடும். இருப்பினும் சிலருக்கு மசக்கை காரணமாக முதல் மூன்று மாதங்களுக்கு எடை குறையும். ஏற்கனவே எடை அதிகமாக இருந்த பெண்களுக்கு எட்டு கிலோ வரை எடை கூடலாம். கருத்தரித்தல் இருந்து பிரசவம் ஆகும் வரை மொத்தம் 10 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம்.

இரத்த அழுத்தம் :

இரத்த அழுத்தமானது 120/80 மிமீ மெர்க்குரிக்கு கீழ் இருந்தல் வேண்டும். ஆனால் 140/90மிமீ மெர்க்குரிக்கு மேல் இருந்தால் மிகவும் கவனம் தேவை. அடிப்படை இரத்தப் பரி சோதனை

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை :

சிலருக்கு கர்ப்பம் ஆகும் முன்னரே நீரிழிவு நோய் இருக்கும். இப்படி ஏற்கனவே நீரிழிவு நோய் இருக்கும் கர்ப் பிணிகள், வெறும் வயிற்றில் இரத்த அளவு 90 மி.கி /டிஎல் எனவும், சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 120 மி.கி /டிஎல் மற்றும் HbAic 6.5% க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்.

இதைத் தெரிந்து கொள்ள மருத்துவரின் முதல் சந்திப்பு அன்று நான்காவது மற்றும் ஏழாவது கர்ப்ப மாதங்களிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச் செய்து 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 140 மிகி /டெலிட்-க்கு மேல் இருந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.

2. ஹீமோகுளோபின்: இது கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவு இரத்தம் உள்ளதா? என்பதைக் தெரிந்து கொள்ள உதவும்.

3. இரத்த வகை மற்றும் ஆர் ஹெச் பிரிவு பரிசோதனை

தாயின் இரத்தம் நெகட்டிவ் ஆகவும் இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சனை (RH incompatiblity) ஏற்படலாம். ஆகவே ஆர்எச் நெகட்டிவ் குருப் கர்ப்பிணிகள் முதல் கர்ப்பத்தின் போது பிரசவம் ஆகி 72 மணி நேரத்துக்குள் (அதாவது மூன்று நாட்களுக்குள்) தாய்க்கு ஆர்எச் இம்முனோகுளோபின் (Anh D) ஊசி போட வேண்டும்.

தைராய்டு பரிசோதனை :

கருவுற்ற இரண்டாம் மாதம் (8-வது வாரம்) இந்த பரிசோதனையினை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

ஹெச்ஐவி (HIV) பரிசோதனை, விடிஆர்எல் பரிசோதனை (VDRL), ஹெப்படைட்டிஸ் B பரிசோதனை.

கர்ப்பிணிகளுக்கு ஹெச்ஐவி, சிபிலிஸ், ஹெப்படைட்டிஸ் (மஞ்சள் காமாலை) ஆகிய நோய்கள் இருக்கிறதா? என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவசியம்.

சிறுநீரில் புரதம் சர்க்கரை பரிசோதனை :

சிறுநீரினை பரிசோதித்து புரதம் மற்றும் சர்க்கரையின் அளவானது கட்டுபாடான அளவுக்குள் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது அவசியம்.

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை (Ultra Sound Scan) :

* கர்ப்பமுற்ற 8 முதல் 13 வாரத்துக்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்பட்டால் நியுக்கல் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதில் கருவில் ஒரு குழந்தையா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதா? பொய்க் கர்ப்பமா? போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

* கர்ப்பமான 20 முதல் 22 வாரங்களில் குறைபாடுகள் கண்டறியும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இதில் கருவாக உள்ள குழந்தையின் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று அறியலாம்.

* 32 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அல்ட்ரா சவுண்ட்ஸ்கேன் சோதனை செய்தவன் மூலம் கருவின் குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, கருவின் குழந்தையின் எடை கூடியுள்ளதா என்பதனையும் அறியலாம்.

சிறப்புப் பரிசோதனைகள் :

* கர்ப்பமுற்ற 11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் நியுக்கல் ஸ்கேன் செய்யும் போது கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் கினட்ரோம், டிரைசோமி போன்ற பிறவிக் கோளாறுகள் உள்ளதாக சந்தேகம் எழுந்தால் ஈஸ்டிரி யால் (estriol), HCG அளவு AFP, PAPP-A ஆகியவையும் செய்யப்படும் தேவைப்பட்டால் ஆம்நியோசின்ன சிஸ், கோரியானிக் வில்லஸ் சாம்ப்பிளிங் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* கருவில் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ (Fetal echo) கருவிலுள்ள குழந்தைக்கு பிறவிலேயே தோன்றக்கூடிய இருதயக்கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு தலைகள் கொண்ட பாம்பு – மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!
Next post ரயிலின் கூரை மீது பயணம் செய்த அகதி: உடல் கருகி பலியான பரிதாபம்..!!