நரகத்தின் வாசலில் இருந்து விசித்திர ஒலிகள்- சிறிது சிறிதாக அழிந்து வரும் காடு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)சைபீரியாவில் வனப்பகுதியில் உள்ள பள்ளம் ஒன்று சிறுகச் சிறுக அப்பகுதியின் வனப்பகுதி மொத்தமும் முழுங்கி ஏப்பம் விட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சைபீரியாவின் 300 அடி ஆழம் கொண்ட Batagaika பள்ளமானது ஆண்டுக்கு 30 முதல் 100 அடி வரை வளர்ந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

hellmouth என அறியப்படும் இந்த பள்ளமானது இயற்கை ஆர்வலர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் 200,000 ஆண்டுகளின் சுற்றுச்சூழல் வரலாற்றை போதிப்பதாக கூறப்படுகிறது.

சைபீரிய உள்ளூர் மக்களால் பாதாள உலகின் முகப்பு வாயில் என குறிப்பிடும் இந்த பள்ளமானது விஞ்ஞானிகளுக்கு சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை வெளிக்கொணர வழிவகை செய்வதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பள்ளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மரத்துண்டுகளால் அப்பகுதி இதற்கு முன்னர் மிகப்பெரிய வனப்பகுதியாக இருந்தது எனவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அரை மைல்கள் நீளத்தில் இருக்கும் இந்த பள்ளமானது 1960 களிலேயே அப்பகுதியில் இருந்த வனப்பகுதியை சிறுக அழித்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் இருந்து எழும் விசித்திர ஒலிகளால் உள்ளூர் மக்கள் இதனை நரகத்தின் வாயில் எனவும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட பள்ளத்தில் இருந்து மணல் திட்டுகளை மட்டுமல்ல உயிரினங்களையே உருவக்க முனைவதாக விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்..!!
Next post கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்..!!