சுடு தண்ணீரை அதிகமா குடிங்க..!!

Read Time:5 Minute, 0 Second

201703021434039818_drink-hot-water-drink-warm-water_SECVPFமருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர்.

ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

* சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.

* இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது. ஆகவே அந்நேரத்தில் சுடு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.

* நிறைய உணவு நிபுணர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும்.

* இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.

* சுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.

* எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

எனவே இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய சுடு தண்ணீரை தினமும் குடித்து, ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `ரயீஸ்’ பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!!
Next post பெண்கள் உச்சமடைவதை இப்படித்தான் தெரிஞ்சிக்க முடியுமாம்…!!