ஜேர்மனி ரெயில் நிலையத்தில் பயணிகளை கோடாரியால் தாக்கிய மர்மநபர்கள்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 26 Second

3E1E374A00000578-4298896-image-m-38_1489092318726ஜேர்மனியில் உள்ள இரயில் நிலையத்தில் மர்மநபர்கள் கோடாரியை கொண்டு தாக்கியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Dusseldorf ரெயில்வே நிலையத்தில் பயணிகள் அனைவரும் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ரெயில் அந்த குறித்த நிலையத்திற்கு வந்த போது, மர்மநபர்கள் இரண்டு பேர் திடீரென்று குதித்து, தாங்கள் வைத்திருந்த கோடாரியால் அங்கிருந்த பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்தரெயில்வே நிலையத்தில் இருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். இருப்பினும் இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

ஒரு சிலர் முகம் மற்றும் உடல் முழுவதும் இரத்தம் வழிந்த நிலையில் வலியால் துடிதுடித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்த தப்பி ஓட முயற்சித்துள்ளனர். சம்பவத்தை அறிந்த பொலிசார் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இக்கொடூரதாக்குதலால் ரெயில் நிலையத்திற்குள் யாரும் வரவேண்டாம் என்று பொலிசார் ரெயில் நிலையத்தை அடைத்துள்ளனர். இத்தாக்குதலால் 6 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் முதல் கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாதிப்பில் 13 வயது குழந்தை ஒருவரும் சிக்கிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டி.ஆர், அனிருத்தை தொடர்ந்து மகனுக்காக களமிறங்கும் சிம்புவின் அம்மா..!!
Next post வயிற்றுப் போக்கா? குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்!!