பெண்கள் எந்த வயதில் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள்..!!

Read Time:2 Minute, 42 Second

201703101430074888_What-kind-of-health-problems-that-women-face_SECVPFஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும்.

அந்த வகை மாற்றத்தின் அடிப்படையில், பெண்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். அந்த குழுக்களில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றத்தை பற்றி காண்போம்.

பெண்கள் முதல் குழுவில் 12- 28 வயது வரை உள்ளவர்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகப்பரு, ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த சோகை, முகத்தில் முடி மற்றும் தைராய்டு கோளாறுகள் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இந்த வயதிற்குட்பட்ட பெண்கள் பெரும்பாலும் சமூகதளத்தில் அதிக நேரம் செலவழிப்பதால், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைக்கு ஆளாகின்றார்கள்.

பெண்கள் இரண்டாம் வகையில் 28-47 வயது வரை உள்ளவர்கள். இந்த வகை பெண்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலையை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.

இதனால் இவர்கள் அதிக களைப்பு, வீக்கம் அடைந்த நார்த்திசுக்கட்டிகள், பருத்து சுருண்ட நரம்புகள், மூட்டு பிரச்சனைகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மூன்றாம் வகையில் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் ஹார்மோன்கள் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இந்த வயதில் இவர்களுக்கு மாதவிடாய் நின்று, மன அழுத்தம், மூட்டு வலி, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படுகிறது.

மூன்று விதமான வகையில் உள்ள பெண்கள் உடல் மற்றும் மனம் ரீதியான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு, தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த கல்யாண மாப்பிள்ளைக்கு வந்த நிலையை பாருங்களேன்!..!! (வீடியோ)
Next post உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன்..!! (வீடியோ)