ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த தீபா..!!

Read Time:1 Minute, 35 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் தீபா தியானம் மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் தியானத்தில் ஈடுப்பட்டார். கடந்த மாதம் ஜெயலலிதா பிறந்தநாளன்று எம்ஜியார் அம்மா தீபா என்ற பெயரில் பேரவை துவங்கினார். இதன் பொருளாளராகவும் தன்னை தானே நியமித்து கொண்டார்.

இதனையடுத்து அவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக அறிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தனது அத்தையின் நினைவித்திற்கு வந்த தீபா, பேரவை உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வைத்து அங்கு தியானத்தில் அமர்ந்தார். தீபாவுடன் அவரது கணவரும் தியானத்தில் அமர்ந்துள்ளார்.

இந்தநிலையில் தீபாவின் தியாகத்திற்கான காரணம் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஓபிஎஸ் மெரினா புரட்சியை போல தீபாவின் தியானம் தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருமா? என்பது அடுத்து வரும் நாட்களில் அவரது நடவடிக்கையை பொறுத்தது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்..!!
Next post தலைவலி பலவிதம்…அலட்சியம் ஆபத்து தரும்..!!