ஆஸ்துமா அலர்ஜிக்கு தவிர்க்க வேண்டியவை..!!

Read Time:2 Minute, 10 Second

201703131132196508_allergic-asthma-To-avoid_SECVPFஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படும் போது ஆஸ்துமா பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சேர்க்கவேண்டிய, தவிர்க்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

நுரையீரல் அலர்ஜி, தொற்று மற்றும் சுற்றுச்சூழலால் ஆஸ்துமா அலர்ஜி ஏற்படுகிறது.

சேர்க்க வேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம்.

நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.

தவிர்க்க வேண்டியவை: மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சௌசௌ, தயிர் இவற்றைத் தவிர்க்கவேண்டும். படுக்கைக்குப் போகும்போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும். இனிப்புப் பண்டங்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை மருந்து எடுத்து வரும் காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்..!!
Next post மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர்: அதிர வைக்கும் காரணம்..!!