ரஜினியின் 2.ஓ படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனை..!!

Read Time:1 Minute, 38 Second

201703131727346123_Rajini-2-point-O-satellite-rights-sale_SECVPFரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி குழுமம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ் மட்டுமில்லாது மற்ற இந்திய மொழிகள் அனைத்துக்கும் சேர்த்தே இந்த தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

‘2.ஓ’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கவுள்ளனர். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். விரைவில், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவரது அற்புத திறமையை பாருங்கள்..!! (வீடியோ)
Next post பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?..!!