தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை..!!

Read Time:3 Minute, 17 Second

201703151451084942_Things-to-look-for-when-eating-yogurt_SECVPFதயிர் இயற்கையின் அருமருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரணமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி தான். பால் செரிக்க நேரம் எடுக்கும். ஆனால் தயிர் பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதத்தை பெற்றுள்ளதுடன் மிக விரைவாக செரித்து விடும்.

பால் ஒரு மணி நேரத்தில் 32% தான் ஜீரணமாகும். தயிர் ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணமாகிவிடும். தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயந்து தயிரை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றனர். உண்மையில் தயிரை அளவோடு எடுத்துக் கொண்டால் உடல் எடையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது. முற்காலங்களில் பசுந்தயிர் உற்பத்தி செய்யப்பட்டது.

தயிர் பாக்கெட்டுகள் தான் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த தயிர் பாக்கெட்டுகளில் புரதத்தை தனியாக உறிஞ்சிவிட்டு குறைந்த புரதத்துடன் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. முழு புரோட்டீனுடன் உள்ள புரோட்டீன் ரிச் தயிர் பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன.

எனவே, தயிர் பாக்கெட்டுகள் வாங்கும் போது புரோட்டீன் ரிச் தயிர் என்றோ அல்லது பின்னால் உள்ள ஊட்டச்சத்து பட்டியலில் புரோட்டீன் 15-18 கிராம் வரை உள்ள தயிரையோ தேர்வு செய்யுங்கள்.

அடுத்தது தயிருடன் எடுத்துக் கொள்ளும் சைட் டிஷ். பொதுவாகவே தயிர் சாப்பிடும் போது கொழுப்பு அதிகமான சைட்டிஷான உருளைக்கிழங்கு வறுவல் அல்லது சிப்ஸ், வேர்கடலை மற்றும் ஊறுகாய் போன்றவற்றை தான் நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இவற்றை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். வீட்டில் தோய்க்கும் தயிரைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இவை நான் தயிர் தோய்க்க பயன்படுத்தும் பாலைப் பொறுத்து புரதத்தையும் கொழுப்பையும் பெற்று இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் தயிரை நன்கு தோய விட வேண்டும்.

சரியாக தோயாத தயிரை உட்கொள்வதால் செரிமானப் பிரச்சனையை ஏற்படலாம். தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலை வாயில் தலையை நுழைத்த சர்க்கஸ் ஊழியர்: நடந்த விபரீதம்..!! (வீடியோ)
Next post நிர்வாணமாக சுற்றி திரிந்த பெண்..!! அதிர்ச்சி வீடியோ