தன் மரணத்தை தானே தீர்மானித்த நபர்!: அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 15 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90நபர் ஒருவர் தனது நடத்தையால் தனது சாவை தானே தீர்மானித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனெஹெய்ம் என்ற நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மைக்கேல் அந்தோனி(வயது 33) என்ற நபர் கடந்த சனிக்கிழமை அன்று தனது சிறிய வானில் வெளியே சென்றுள்ளார்.

இவரது காரில் பின்னால் இருந்து சிவப்பு விளக்கு உடைந்து இருந்தால் இதனை கவனித்த பொலிஸார் காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதனை சற்றும் பொருட்படுத்தாத மைக்கேல் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் காரை சுற்றி வளைத்து நிறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமன்றி காரை விட்டு கீழே இறங்குமாறு பொலிஸார் வலிறுத்தியுள்ளனர். பொலிஸாரின் உத்தரவுக்குக் கீழ்படியாத அந்த நபர் சிகரெட் பிடித்துக்கொண்டு உள்ளேயே அமர்ந்துள்ளார்.

இதனையடுத்து எரிவாயு சிலிண்டர் மற்றும் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் ஆகியவற்றை கையில் எடுத்துக்கொண்டு அந்நபர் பொலிஸாரை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

பொறுமையை இழந்த பொலிஸார் உடனடியாக தீயணைக்கும் வாகனத்தை வரவழைத்துள்ளனர். பின்னர், அதிவேகத்தில் காருக்குள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இதில் காரின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பொலிசாரின் செயலால் ஆத்திரம் அடைந்த மைக்கேல் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு காரில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதேவேளை மைக்கேலால் ஆபத்து ஏற்பட போவதை உணர்ந்த 5 பொலிஸார் உடனடியாக துப்பாக்கிகளை எடுத்து மைக்கேலைநோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் இரத்த வெள்ளத்தில் மைக்கேல் கீழே விழுந்துள்ளார். மைக்கேலை பொலிஸார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் ஞாயிற்றுக்கிழமை மைக்கேல் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பொலிஸாரை அச்சுறுத்தியதன் காரணமாகவும், எரிவாயு சிலிண்டர் மூலம் காரை வெடிக்க வைத்து விடலாம் என்ற அச்சத்தினால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு முன்னாடி இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… செய்றீங்களா?..!!
Next post மிரட்டும் பாகுபலி 2 டிரைலரில் இதை எல்லாம் கவனித்தீர்களா?..!! (வீடியோ)