இஸ்லாமிய பயணிகளுக்கு ஏற்பட்ட அவமானம்? புத்திசாலித்தனமாக அவர்களை காப்பாற்றிய பெண்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 35 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)அமெரிக்காவின் நியூயார்க் நகரியில் இரயிலில் பயணித்த இஸ்லாமிய தம்பதியினரிடம் ஸ்பானிஷ் பெண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இஸ்லாமிய தம்பதியினர் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்பானிஷ் பெண் ஒருவர் கடுமையான இனவாத பேச்சுக்களால் அவர்களை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார். இதனால் அவர்கள் தலை குனிந்த நிலையில் பெரிதும் அவமானத்திற்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த பெண் ஒருவர் இஸ்லாமிய தம்பதியினருக்கு ஆதரவாக அந்த ஸ்பானிஷ் பெண்ணிடம் பேச முயற்சித்தார். ஆனால் அப்பெண்ணோ நீங்கள் எந்த நாட்டவர், நான் அவர்களுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ என்று ஆத்திரமாக கூறியுள்ளார்.

இதற்கு அவர் நீங்கள் யாருடனும் பேசவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தயவுசெய்து மரியாதையாகப் பேசுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

நான் இந்த நாட்டில் பிறந்தவள். எனது நாட்டிற்கு வந்திருக்கும் ஒருவரை நீங்கள் மரியாதையின்றிப் பேசுவதை அனுமதிக்க முடியாது. நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி. உங்களுக்குத் தெரிந்த மொழியில் இதைச் சொல்ல என்னால் முடியும்.

இங்கு நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். இந்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் போகலாம். அது உங்கள் உரிமை.

ஆனால் அதற்காக மற்றவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்க முடியாது. இத்தனை வயதாகியும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த ஸ்பானிஷ் பெண் தமது இனத்தவர்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் தம் இனத்தவர் மீதும் தான் தாக்குதல் நடத்தப்படுகிறது, அதற்காக தாம் மற்றவர்களை இழிவாக பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற பிரச்சனைகளால் நாம் மற்றவர்களைத் தாக்கினால், பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இவர் பேசிய அந்த பேச்சு வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு அந்த பெண்ணிற்கு பல பாராட்டுகளும் குவிகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமியை கடத்தி 1000 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த கொடூரம்..!!
Next post கண்ட கண்ட இடங்களில் ஆண்கள் தமது விந்தை வெளியேற்றினால் 100 டொலர் அபராதம்..!!