‘டோரா’ படத்துக்காக நடுரோட்டில் உருண்டு புரண்ட நயன்தாரா..!!

Read Time:1 Minute, 39 Second

201703211359057407_Nayanthara-Rolled-on-the-road-for-Dora-says-director_SECVPFதாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

“நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் நயன்தாரா எளிமையாக நடந்து கொள்வார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் போய் உட்காரமாட்டார்.

`டோரா’ படத்துக்காக ஒரு காட்சியில் நடுரோட்டில் உருண்டு புரள வேண்டும் என்று சொன்னதும், அவர் நடுரோட்டில் உருண்டு புரள மாட்டேன் என்று சொல்லி விடுவாரோ என்று படக்குழுவினர் தயங்கினார்கள். ஆனால் சொன்ன உடனே நயன்தாரா உருண்டு புரண்டு நடித்தார். விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா”.

இப்படி சொல்பவர் `டோரா’ பட இயக்குனர் தாஸ் ராமசாமி.

மார்ச் 31-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு, தணிக்கைகுழு `ஏ’ சான்றிதழை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை: நீதிமன்றத்தில் கூறிய அதிர்ச்சி காரணம்..!!
Next post எல்லை மீறும் கேப்டன் டிவி அந்தரங்க நிகழ்ச்சி! அதிர்ச்சி வீடியோ..!!