மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்: ‘ராஜா ரங்குஸ்கி’ நாயகன் ஷிரிஷ்..!!

Read Time:2 Minute, 51 Second

201703220701522552_Public-believed-me-that-I-am-a-real-cop-says-Raja-Ranguski_SECVPF‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. சக்திவாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த ”ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கிரைம் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வடசென்னையில் நடைபெற்று வருகிறது. ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிப்பது குறித்து நாயகன் ஷிரிஷ் கூறியதாவது,

“ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வடசென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய சண்டை ஏற்பட்டது. நானோ போலீஸ் உடையில், அதுவும் ரோந்து வாகனத்தில் உட்கார்ந்து இருந்ததால், ஒரு நபர் என்னிடம் வந்து “நீங்க போலீஸ் தானே? ஏன் இவர்களை நீங்கள் கட்டுப்படுத்த கூடாது?” என்று கேட்டார்.

சில நிமிடங்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு பிறகு நான் அவரிடம், “நான் நிஜ போலீஸ் இல்லை” என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டேன்” என்று நகைச்சுவையாக கூறுகிறார் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் கதாநாயகன் ஷிரிஷ்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் அவரின் முதல் படமான ‘மெட்ரோ’ திரைப்படத்தை பற்றி ஷிரிஷ் கூறுகையில்: மெட்ரோ திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் இருந்து கிடைக்கும் பாராட்டுகளுக்கும், ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? சென்னையில் சூதாட்டம்..!!
Next post எந்த உணவுகளை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?..!!