இலங்கையை ஆண்ட இராவணனின் அரண்மணை..!! (வீடியோ)

Read Time:3 Minute, 22 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறையே இது.

தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை இவ்விடத்தில் உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராவணனின் பாட்டி ஆவிர்பூ கன்னியாக இருந்த போது இவ்விடத்தில் தான் புலத்திய முனிவரைக் கண்டதாகத் தெரிய வருகிறது. அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதாக குறிப்புகள் கூறுகின்றன.

இத்தனை பாரம்பரியமிக்க நமது கன்னியா நம் கையை விட்டுப் போய் விட்டதாக பலர் கவலையடைகின்றனர். ஆனால் இந்த நிலைமைக்கு தமிழர்களின் உதாசீனப் போக்குதான் காரணமாகிறது.

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வதிலே இலங்கைத் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள். கன்னியா எமது கையை விட்டுப் போய் 5 வருடங்கள் தான் ஆகின்றன. ஆனால் 150 வருடங்களாக இது நம் கையில் தான் இருந்தது.

இந்த கால கட்டத்தில் இங்கு ஓர் பெரிய சிவன் கோயிலை ஏன் கட்டவில்லை????

அகத்தியர், ஆவிர்பூ, கைகேசி, இராவணன் ஆகியோருடன் தொடர்புடைய கன்னியாவை தமிழர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்??????

இங்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தால் எத்தனை புத்தர் சிலைகள் வைத்தாலும் எம் கோயில் அப்படியே இருந்திருக்கும். யாராலும் அதை உடைக்க முடியாது. எமது அடையாளம் காப்பாற்றப் பட்டிருக்கும்.

ஆனால் இப்போது இந்துக்களின் அடையாளம் எதுவும் அங்கே இல்லை.திருக்கோணேஸ்வரத்திற்கு நாம் கொடுத்த முக்கியத்தில்

பாதியாவது கன்னியாவிற்கு கொடுத்திருக்கலாம் அல்லவா, ஏன் கொடுக்கவில்லை???

இது போல நூற்றுக்கணக்கான எம் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் உள்ளன.

இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இனிமேலும் தூங்கிக் கொண்டிருந்தால் ….

கன்னியா, கச்சகொடிமலை, பச்சனூர்மலை, சாம்பல்தீவு, மாணிக்கமடு என பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மன் இந்துக் கோவில் கோபுரத்திற்குள் ஆணின் சடலம்..!!
Next post உடலுறவின் நேரத்தை இரண்டு மடங்காக்கும்..!!