ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவரின் குல்லாவை பறித்த குழந்தை..!! (வீடியோ)

Read Time:2 Minute, 1 Second

201703231144294243_Girl-steals-Pope-Francis-hat-at-Vatican-greeting_SECVPFவாடிகன் நகரில் ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவர் அணிந்திருந்த குல்லாவை குழந்தை பறிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவர் வாடிகனில் பொதுமக்களை அவ்வப்போது சந்தித்து ஆசிர்வதிப்பது வழக்கம். இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்து கொண்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கூடி இருந்து ஆசி பெற்றனர்.

அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 3 வயது பெண் குழந்தையுடன் ஆசி பெற வந்திருந்தனர். அந்த குழந்தையை பார்த்ததும் போப் ஆண்டவர் குழந்தைக்கு முத்தம் கொடுத்து ஆசிர்வதிக்கும் வகையில் குழந்தையை நோக்கி குனிந்தார்.

அப்போது அந்த குழந்தை போப் ஆண்டவர் தலையில் அணிந்திருந்த குல்லாவை கையில் எடுத்து விட்டது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்தனர். ஆனால், போப் ஆண்டவர் குழந்தையை பார்த்து சிரித்தபடி என் தொப்பியை திருட பார்க்கிறாயா? என்று கூறி கொஞ்சினார்.

இதை பார்த்து மற்றவர்களும் சிரித்து விட்டனர். பின்னர் குழந்தையிடம் இருந்த தொப்பியை வாங்கி அணிந்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

போப் ஆண்டவர் அணிந்திருந்த குல்லாவை குழந்தை பறிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..!!
Next post எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!!